விலங்கை விளங்காமல் பூட்டுதல்.
எதுவும் தரிசிக்காத
பூமி போன்றது என் மனம்
காலப் பேரலையால்
தனித்து விடப்பட்டது என் தேசம்
வளமிக்கது தான் என் தேசம்
அதற்காய் ஆக்கிரமிக்காதீர்.
எதை உள்வாங்க வேண்டுமென
எனக்குத் தெரியாதா..?
எது வீரிய விதை,
எது செழிப்பான விதை?
எவ்விதையும் பயன்,
எம்மரம் எனக்குப் பயன்?
தெரிவுக்கு விடு..!
திணிப்புச் செய்யாதீர்.
சிந்தித்தறிய விடு..!
நான் மனிதக் குழந்தை..!
விளங்காமல் விலங்கு பூட்டுகிறீர்,
பேசிப்பேசியே “கொள்கை விலங்கு”
எல்லாம் தணிக்கை செய்துவிட்டு
நீ திணித்தது தான் சரி என்கிறீரா..?
எந்தக் குறையுமற்றது என் கண்
எதற்கிந்தக் கண்ணாடி?
குறை கண்ணுக்கு கண்ணாடி;
கண்ணாடி போட்டுக் குறைகாண்பதா?
என் விழிக்குத் திரையிட்டு
உம் வழியில் நடக்க சொல்லாதீர்.
எந் நிழலிலும் இளைப்பார முடியாது!
எனதானதை நானே தெரியும் வரை…!
2007.05.24
றாபிதா கலமியா