கரம் சேராக் கவிதை.
கரம் சேராக் கவிதை.
கரம் சேராக் கவிதை.
வறிய முற்களுக்கிடையால்
ஒரு றோஜா
எட்டிப் பார்க்கிறது
அரூபமான ஒரு வேதனையுடன்.
நிசப்தத்தைத் துளைக்கும்
கடிகார இதயத்துடிப்பு
தோற்றுப் போகிறது
அந்த மலரிதழ் துடிப்பில்
சிமினி லாம்பின் பெருமூச்சை
சட்டை செய்யாக் காற்று கூட
அந்த மலரின் வெளிச் சுவாசத்தால்
கருகிப் பறக்கிறது.
மெழுகுதிரி கேவிக் கேவியே
கரைந்து போகிறது
மசங்கிப் போன இதயத்தை
சுமக்க முடியாமல்
தென்றல் கூட தாங்க முடியாமல்
கிடுகு முகட்டில்
தலையை அடித்து அடித்து
அழுகிறது.
“பாவம் இந்தக் கவிதை
பூப் பெய்தியும்
கரம் சேராதிருக்குதே!”
என் காதோரம் சொல்கிறது
தூரத்து நிலவு மௌனமாக..(!)
இஸ்பஹான் சாப்தீன்
2005.09.04
கவிதை அரங்கம்,
தினகரன்.