என்ன இது?
என்னுள் நுழைந்து,
அலைந்து திரிந்து
நெஞ்சுள் குடைந்து
நெழியுது அது.
விரக்தி,
வெறுப்பு,
இல்லை
சொல்ல முடியாத
ஏதோவொரு உணர்வை
என்னுள் அது
உற்பத்தி செய்கிறது.
கண்ணீர்
ததும்புவதாய்…
உதடுகள்
விம்முவதாய்…
குரல்வளை
செருகுவதாய்…
என்ன இது?
இப்படியாக
முன்னரும்
பல தடவைகள்
வந்திருக்கிறது.
எதனால் இது?
உடன் விரைகிறேன்
குழாய் திருகுகிறேன்
குளிக்கிறேன்
காரணம் இல்லாமல்
எப்போதும் போல
‘ஆண்கள் அழக்கூடாது’
2020.01.10 | 22:45
இஸ்பஹான் சாப்தீன்