அவர்கள் வருவார்கள்.
1 min read
அவர்கள் வருவார்கள்.
காரிறங்கி வருவார்கள்.
மனமிறங்க மாட்டார்கள்.
வெள்ளையற்ற உள்ளம்,
வெள்ளை காட்டி,
வெள்ளை உடுத்தி வருவார்கள்.
கைகொடுக்க மாட்டார்கள்
கை தூக்கியும்
கைகூப்பியும் வருவார்கள்.
மாடி வீட்டில் மடிந்தும்
குடிசை வீட்டில் குனிந்தும்
கைநீட்டி வருவார்கள்.
வாக்குகள் பல கொடுப்பார்கள்.
வாய்ப்பேச்சு நம்பி
வாக்களிப்போம் நாமும்.
வெற்றியும் பெறுவார்கள்.
வெட்டிய இலக்கம் போல்
வெட்டியே விடுவார்கள்.
தந்த வாக்குகளுக்காய்
கொடுத்த வாக்குகள் செல்லுபடியாகும்
நமக்கல்ல வந்தவர்களுக்கு…!?
GALLE FM இல் வாசித்த கவிதை.
2004