அந்த ஏழு நாட்கள்.
1 min readஇலை துளிர்க்கும்
ஏப்ரலில்-என்
இதயம் துளிர்த்த
அந்த ஏழு நாட்கள்.
உறவு தேடி
கடல் விட்டு
உயர் நிலத்தில்
பாய்ந்தேன்.
தேயிலை நோண்டும்
இளந்தென்றல்
என் இதயத்தையும்
நோண்டியது.
பைனஸ் காட்டுக்குள்
புது நண்பர்களுடன்
கிரிக்கட் விளையாடிய
பொழுதுகளையும்,
தேயிலை கழுவி வந்த
சிறு ஓடையிலே
தேகம் கழுவிய
பொழுதுகளையும்,
அந்திக் குளிரில்
அந்த பாழ் வீதியில்
பாட்டிசைத்து வந்த
பொழுதுகளையும்
அதிகாரிகள் காணாமல்
பைனஸ் குச்சிகள்
உடைத்த கள்ளப்
பொழுதுகளையும்,
வெளிமட மேட்டுநில
பைனஸ் பூவொன்றில்
பனித்துளி மொழியால்
எழுதி வைத்திருக்கிறேன்…!
(2004.04 டயரியிலிருந்நது…)