சொந்தக்காரர்களே..!
கூப்பிடும் சப்தம் கேட்கிறது
கூடைக்குள்ளிருந்து..!
குனிந்து பார்க்கிறேன்
குப்பைக்குள் குழந்தை…?
தொட்டில் எப்படி
தொட்டியாகும்…?
றோஜாப்பூ எப்படி
நெருப்பாகும்…?
சொந்தக்காரர்களே
இஸ்பஹான் சாப்தீன்
2006.02.05
கவிதைப் பூங்கா,
தினகரன்.
(குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு குழந்தைச் செல்வம் கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு எழுந்த எண்ணங்கள்)