மறக்க முடியாது
1 min readஉப்பு நீருடன் கலந்த
உம் கண்ணீர்த் துளிகளையும்…
அலைச் சப்தத்துடன் கலந்த
ஓலச் சப்தங்களையும்…
மண்ணுடன் கலந்த
மனித உடல்களையும்…
மீன் பிடிக்கும்
மீனவனுக்கும்…
பேனை பிடிக்கும்
மாணவனுக்கும்…
உயிர் தப்பிய
உறவுகளுக்கும்…
கடல் தரிசித்த
கட்டுகொடைக்கும்…
மறக்க முடியாது
மறக்கடிக்கவும் முடியாது..!