ஆத்திசூடி போல் ஒரு பாட்டிசூடி…
அ ல்லாஹ்வின்
கலீபா நீ
அ வன் சொற்படி
நடந்திடு!
ஆ சைக்குள்
பிறந்தவன் நீ
ஆ ள்பவனை
அஞ்சிடு!
இ ஸ்லாத்தை
ஏற்றவன் நீ
இ றுதி வரை
பேணிடு!
ஈ மான் கொண்ட
முஃமின் நீ
ஈ ந்துகொடுக்க
பழகிடு!
உ லக படைப்புள்
சிறந்தவன் நீ
உ ண்மையை
நிலைநாட்டிடு!
ஊ த்தை உலகில்
உள்ளவன் நீ
ஊ தியம் செய்து
வாழ்ந்திடு!
எ ஜமான் உண்டு,
அடிமை நீ
எ ண்ணி வாழப்
பழகிடு!
ஏ ந்தல் நபிவழி
வந்தவன் நீ
ஏ ழைக்கு
உதவிடு!
ஐ வேளையும்
தொழுதிடு நீ
ஐ க்கியமாய்
வாழ்ந்திடு!
ஒ ருவனையே
நம்பிய நீ
ஒ ற்றுமையாய்
இருந்திடு!
ஓ சையுடன்
ஓதிடு நீ
ஓ திய படி
ஒழுகிடு!
ஔ டதமாய்
இருந்திடு நீ
ஔ வியத்தை
மறந்திடு!
இஸ்பஹான் சாப்தீனின் பாட்டிசூடி.
றாபிதா கலமியா
2004