சு’தந்திர இல்லம்.. இதற்கு முகாம் என்று பெயர்..
1 min readமூத்த மகனின் வயது
எந்தேச யுத்தத்தின்
வயதிருக்கும்.
பிறந்த திகதி தெரியாது!
தாயகம் விட்டு
துரத்தப்பட்ட எமக்கு
முகாமாவது
உரிமையா..?
முகம் புதைத்து அழ
முடியாதிருக்கிறது.
முகாமிலும்
சுதந்திரமில்லை..
சமாதானத்திற்காய்
இன்னும்
சம தானம்தான் நடக்கிறது
நம் தேசத்தில்..
பார் முடிந்தாலும்
போர் முடியாது போலும்,
ஒரு பேச்சுக்காவது..
கருவிலிருக்கும்,
சிசுவுக்கும்
முகவரி
அகதி முகாமா..?
எத்தனை கிழிசல்கள்
என் பாவாடையில்
வாழ்கையைப் போலவே..?
வைகறைகள்
எத்தனை வந்தாலும்
எமக்கு இருள்தான்.
சூரியனுக்கும் கீழ்..
இஸ்பஹான் சாப்தீன்.
உரமாகும் சருகுகள்-2007