வழக்கொழியா புர்கானே!
1 min readநடைமுறையில் காணா
புது நடையினிலே வந்தாய்…
கதை சொன்னாய்
கவிக்க முடியாததையும்
கவிதையாய்ச் சொன்னாய்…
நன்மாராயம் செய்தாய்…
நடுங்கவும் வைத்தாய்…
வரலாறாய்ப் பலதை
வலுவாக்கிச் சென்றாய்…
உதாரணம்
உவமை
குறியீடு என
பல மொழியில் பேசுகிறாய்…
காலங்கள் மாறியும்
கருத்துச் சொல்கிறாய்…
ஒரே குவளையில்
சர்வ ரசத்தையும்
ருசிக்க வைத்தாய்..
இலக்கியப் புதுமையாய்
இலங்கி நிற்கிறாய்..
பன்னூறு கவிஞர்களை
பதரவும் வைத்தாய்…
வளமிக்க குர்ஆனே!
வழக்கொழியா புர்கானே!
இறை உரையே..!
நீ தரம் நிரந்தரம்.
-2008.09.10