உன் ஞாபகங்கள்..!
மறைந்து போகும் பறவைகள்…,
மஞ்சல் வானம்…,
மலையோர வீதி…,
ஒரு மாட்டு வண்டி…,
சில ஆடுகள்…,
காற்றலையில் சருகுச் சப்தம்…,
கிளை விரிந்த தனிமரம்…,
திருப்பத்தில் ஒரு டீக்கடை…,
தூரக் காற்றில் பழைய பாடல்…,
தோளைத் தொடும் மரக்கிளை…,
நானே செய்த பலகை இருக்கை…,
ஊதி ஊதிக் குடிக்க தேனீர் கோப்பை…,
தென்றலோடு தழுவும் உன் ஞாபகங்கள்…!
வளாக வாழ்வின் விடுகை வருடத்தின் (2011) போது என் ஒட்டொகிராப் ஒன்றின் முகப்பில் எழுதிய வரிகள்.