போற்றுகிறேன் இறைதூதரை…
சேற்றில் மலர்ந்த தாமரை,
மனிதம் விழித்த வைகறை,
இஸ்லாத்தின் கலங்கரை,
நடமாடும் இறைமறை,
இறைமறையின் நடைமுறை,
அவர் வாழ்வே தூதுரை,
போற்றுகிறேன் நபி நாதரை,
நம் இறுதித் தூதரை.
பேரண்டத்தின் இறையருள்,
அர்ப்பணித்தார் முழு ஆயுள்,
அகன்றதுவே காரிருள்,
அகிலமே கூறும் அவள் புகழ்.
உம்மத்தின் உதிரம்,
உண்மையின் சிகரம்,
அவர் வந்ததுதான் தாமதம்
மலர்ந்தது மக்கமா நகரம்,
ஒலிந்தது சதி அதிகாரம்,
வளர்ந்தது நல் மனிதம்.
சொல்லடி பின்
கல்லடிபட்டும்
தன்னடி தளராது
வெற்றிப்படியேறிய
தூய இறையடியானவர்.
ஒளி விளக்காய்
நல் வழிகாட்டி
பேராழியில் வீழ்ந்து
போலியாய் வாழ்ந்த
மக்கமா மாக்களை
மக்களாய் மாற்றிய
மா மனிதரவர்
முஹம்மது நபி நாதர்
போற்றுகிறேன் உயிர் தூதரை.
இஸ்பஹான் சாப்தீன்
2009.03.10
(நபி(ஸல்) அவர்களின் பிறந்த தின விசேட இதழுக்காக எழுதப்பட்டது.)