மனதிற்கு விலங்கிடு!
மனதிற்கு விலங்கிடு!
மேற்கெனும்
பாசி படர்ந்த பாறையில்
வழுக்குமென்றறிந்தும்
வாழ்க்கையை சுமந்துகொண்டு
காலடி வைப்பதா?
போதை தலைக்கேறி
பாலையில் ஒட்கத்தை இழப்பதா?
வனத்தில் பாதையை இழப்பதா?
அவஸ்தையென அறிந்தும்
கன்னி வலையில்
ஆசையோடு
மாட்டிக் கொள்வதா?
களியாட்டமாய்
உன் இளமையை
பலியாக்கப்போகிறாயா?
சத்தியத்தை அறி!
புத்தி தெளி!
மனதிற்கு விலங்கிடு!
இனியும்
விலங்காய்த் திரியாதே!
மேய்பர்கள் நல்லவர்களல்லர்
சுட்டுவதையெல்லாம்
மேய்வதற்கு..
இஸ்பஹான் சாப்தீன்
(நான் எழுதிய ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று, இளைஞர் முகாமொன்றின் சஞ்சிகைக்கு எழுதியது)