ஆதிப் பெண்??
ஆதிப் பெண்??
பூச்செடியில்
ஊர்ந்து செல்கிறது
பாம்பு,
இன்னும்
என் காலைக்
கழுவவில்லை
கால நதி,
இடைவிடாது
வர்ணிக்கப்படும்
அம்மணமாய்
நான்,
நிரோத்தில்
சில துளிகள்
எறியப்படுகிறது
வெளியில்..
இப்போதும்
பேசுகிறார்கள்
ஆதிப்பாவம்
நானென்று.
இக்கவிதை,
கடைசிப் பக்கத்திலேனும்
பிரசுரிக்கப்படுமா??
20100308
இஸ்பஹான் சாப்தீன்