நீ இன்னும்…
நீ இன்னும்…
என்னிமைகளை விட்டும்
நீ மறைந்து ஒரு வருடம்
ஆயினும் நீ எனக்குள்
நித்யமாய் வாழ்கிறாய் நண்பா!
நிசப்தமும் நானும்
தனிமைப்படுகையில்
எனக்குள் நீ
ரூபமெடுக்கிறாய் நண்பா!
நாம் முசுப்புப் பொழுதில்
அமர்ந்திருக்கும் தோணி,
நோன்புப் பொழுதுகளில்
நாம் பார்த்து ரசித்த
அந்திவானப் புதினங்கள்,
ஓடிப்பிடித்து விளையாடிய
கிராம இடுக்கு முடுக்குகள்,
நான், நீ
இன்னுமின்னுமாய்…
இறுவட்டில் பதிந்த
காட்சிகளாக எனக்குள்..
என் மோதிரம் பதித்த கல்லாய்
இன்னும் எனக்குள் நீ நித்யமாய்..
ஆயினும் உன் மறைவு
என்னையும் கடலையும்
அந்நியமாக்கிவிட்டது!
நீ அறிவாயா நண்பா?
2006.01.07
கவிதை அரங்கம்
தினகரன்,
(சுனாமி அநர்த்தம் ஏற்பட்டு ஒரு வருடத்தில் எழுதிய கவிதை)