December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

கடைசி எழுத்து..

1 min read

கடைசி எழுத்து… முதுமை.

.

நிலை-1
அம்மாவின் காதுகள்
ஆசையாய்க் கேட்ட
முதல்கட்ட வார்த்தைகள்
கொஞ்சம் கரடுமுரடாய்
வெளிவராமல் வாய்க்குள்..,

.

நிலை-2
தந்தை சுட்டுவிரல் தாங்கி
எழுந்து வைத்த எட்டுகள்
தள்ளாடும் தடியுடன்
சூம்பிய கால்கள்..,

.

நிலை-3
வட்டாரியால்
வாந்து கீறப்பட்ட
கோடுகளைச் சுமந்த
பாடசாலை மேசை முகம்..,

.

நிலை-4
நிறுவன ‘பைல்’ கட்டுகளை
தட்டித் தட்டியே
உதிர்ந்தும் வெளிரியதுமான
தூரிகை மயிர்..,

.

நிலை-5
சொந்தங்களுடன்
கட்டுப்பாடு, கடப்பாடு,
வரையறையுடன்
சப்தமிட்ட மேளத்தின்
சுரங்கிய தோல்..,

.

நிலை-6
மொத்தமாய்ச் சொன்னால்
வாழ்க்கையெனும் வாக்கியத்தின்
முற்றுப்புள்ளியை நெருங்கும்
கடைசி எழுத்து.

 

இஸ்பஹான் சாப்தீன்.
2005.08.27
கவிதை அரங்கம்
தினகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.