முட்டையோடு வெடித்தால்உயிர் வரும்,புவியோடு வெடித்தால்உயிர் போகுமெனநானறியேன்! வலை வீசினால்மீன் கிடைக்கும்,அலை வீசினால்பிணம் கிடக்குமெனநானறியேன்! வரப்புயரநீருயரும்,வரம்புமீறஅலையுயருமெனநானறியேன்! கவிஞர் இஸ்பஹான் ஷாப்தீன் (சுனாமி பாதிப்பிற்குப் பின் 2005 ல் "காலி எப்.எம்" ல் வாசித்த கவிதை)
எனக்கொருமனைவி தேவை! அவள்,இந்த உலகத்துக்குஅழகானவளாகஇருக்கத் தேவையில்லை..! என் உலகத்தைஅழகாக்குபவளாகஇருக்க வேண்டும்...! அவளே...என் உலக அழகி! இஸ்பஹான் ஷாப்தீன் 2012.04.10 (ஆங்கிளக் கூற்றொன்றைத் தழுவி எழுதிய கவிதை)
'புரியாத பிரியம்பிரியும் போதுபுரியும்' என்பர்.புரிந்த பிரியம்பிரியும் போதுஎரிகிறது என்னிதயம்...இறைவனுக்காய்க்கொண்ட உறவில்பிரிவென்பது பொய்யாகிறது.நானும் நீயும்முடிச்சிடப்பட்ட ஒரு கயிற்றின்இரு அந்தங்கள்தூரமாகும் போதுதான்இறுகுகிறது...நம் உறவு முடிச்சுஅதிகமாய்த்தூரமாகிஅறுத்துவிடாதே...!இருப்பினும்...பிரிவுகள் நிரந்தரமல்ல.மீண்டும் சந்திக்கலாமே...அவனர்ஷின் நிழலில்...மஹ்ஷர் வெளியில்...20090301
ஒரு வர்த்தி ஒளி,ஒரு மூக்குக் கண்ணாடி,ஒரு பேனை,ஒரு வெள்ளைக் காகிதம்,நிசப்தமான அறை,யன்னலோர சாய்வு நாற்காலி,ஏகாந்தப் பெருவெளி,இருள் கப்பிய வானம்,மிருகக் கண்களாய் நட்சஸ்திரம்,அணைக்கத் துடித்தபடிஉன் நினைவுகள்.இது என் அழகிய...
விடுதியில்அதிகம் தூங்குபவன் நான்.நண்பன் ஏசிக்கொண்டே இருப்பான்.அவனுக்குத் தெரியாதுஎன் காதலிகனவென்று.