உண்மையான அன்பு
சீறாவில் இருந்து…..(6)
உண்மையான அன்பு.
ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களை மிக ஆழமாக நேசித்தார்கள். ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் வுழு செய்துகொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் கைகளில் இருந்தும் முகத்திலிருந்தும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அப்போது சுற்றியிருந்த ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் உடம்பிலிருந்து சொட்டும் நீரை தம் கைகளில் ஏந்தி அவர்களது உடம்பில் தடவிக் கொண்டார்கள்.
இதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள்:
“ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?” என்று வினவினார்கள்.
அதற்கு ஸஹாபாக்கள்:
“பரக்கத்திற்காகவும் அல்லாஹ்வின் (திருப்தி) தயவை பெறவுமே இப்படிச் செய்கிறோம்” என பதிலளித்தார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள்:
“உங்களில் யார் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் திருப்தியை நாடுகிறாரோ,
அவர் எப்போதும்..
உண்மை பேசுதல்,
வாக்குறுதியை நிறைவேற்றல்,
அயலவர்களுடன் நல்ல முறையில் நடத்தல்.
ஆகிய மூன்று காரியங்களையும் செய்யட்டும்.
அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் அன்பை வெளிக்காட்டவும், திருப்தியையைப் பெறவும் இவையே சிறந்த வழிகளாகும்.” எனக் கூறினார்கள்.
(மிஷ்காத்)
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)