ரஸூலுல்லாஹ்வுக்கு எப்படி?
சீறாவில் இருந்து…..(5)
ரஸூலுல்லாஹ்வுக்கு எப்படி?
உஹத் யுத்தம்.
நபி(ஸல்) அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும், முஸ்லிம்கள் யுத்தத்தில் தோல்வியடைந்து விட்டதாகவும் பரவிய வதந்தி மதீனாவில் இருந்த ஒரு அன்சாரிப் பெண்மணியின் காதுக்கும் எட்டியது. அப்பெண்மணிக்கு இச்செய்தி கடும் கவலையை ஏற்படுத்தியது. தன் உயிரையும் துச்சமென நினைத்து போர்க்களத்தை நோக்கி விரைந்தாள். அந்த வழியாக வந்த ஒரு மனிதரிடம்,
“ரஸூலுல்லாஹ்வுக்கு எப்படி?” என்று கேட்டாள்.
அவரோ “உங்கள் தந்தை இறந்துவிட்டார்” என்றார்.
அவள் “ரஸூலுல்லாஹ்வுக்கு எப்படி?”
அவரோ “உங்கள் சகோதரர் இறந்துவிட்டார்” என பதிலுரைத்தார்.
“ரஸூலுல்லாஹ்வுக்கு எப்படி?” என மீண்டும் கேட்டாள்.
“உங்கள் கனவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்” என்றார்.
அந்தப் பெண்மணியோ தன் தந்தையின் மரணம் பற்றியோ, தன் சகோதரனின் மரணம் பற்றியோ, தன் கனவனின் மரணம் பற்றியோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாற்றமாக “ரஸூலுல்லாஹ்வுக்கு எப்படி? தயவு செய்து சொல்லுங்கள்!” என்றே வினவினாள்.
அம்மனிதரோ நபி(ஸல்) அவர்களின் நிலை பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, அந்த அன்சாரிப் பெண்மணி போர்க்களத்தை நோக்கி நடையைத் தொடர்ந்தாள். போர்க்களத்தை சென்றடைந்ததும் நபி(ஸல்) அவர்களின் கூடாரம் தென்பட்டது. அங்கு போய்ச் சேர்ந்தாள். அங்கே, நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருப்பதைக் கண்டதும் அப்பெண்மணி அளவிளா ஆனந்தமடைந்தாள். நபி(ஸல்) அவர்களை பார்த்து “நீங்கள் உயிரோடு இருப்பதை கண்டதும் என் குடும்பத்தாரின் இழப்பு எனக்கு பெரியதொரு இழப்பாக விளங்கவில்லை” என கூறினாள்.
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)