கெட்ட செய்தியும் நல்ல செய்தியும்.
சீறாவில் இருந்து…..(7)
கெட்ட செய்தியும் நல்ல செய்தியும்.
ரஸூல்(ஸல்) அவர்கள் பல நாட்களாக சுகயீனமுற்றிருந்தார்கள்.
அது அவருடைய இறுதிக் காலப்பகுதி.
ஒரு நாள் அவருடைய அன்பு மகள் அருமை பாத்திமா(ரலி) அவர்களை அழைத்து அவர்களது காதில் ரகசியமாக ஏதோ சொன்னார்கள். உடனே அழ ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களை அருகில் அழைத்து காதில் ஏதோ சொன்னார்கள். உடனே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு ஆயிஷா(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களிடம்:
“நபி(ஸல்) அவர்கள், அவரது இறுதி நேரத்தில் உங்களிடம் என்ன சொன்னார்கள்.
முதலில் அழுதீர்கள் பிறகு சிரித்தீர்களே..?” என வினவினார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள்:
‘முதலில் எனது தந்தை இது என்னுடைய இறுதி (நோய்) தருணம் என்று கூறினார்கள்.
எனக்கு அழுகை வந்துவிட்டது.
பிறகு அழைத்து, எமது குடும்பத்தவர்களில் நான்தான் முதன்முதலில் சுவர்க்கத்தில் அவரை சந்திப்பேன் எனக் கூறினார்கள்.
எனக்கு சந்தோசத்தில் சிரிப்பு வந்துவிட்டது’ எனப் பதில் அளித்தார்கள்.
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)