அம்பு மழை
சீறாவில் இருந்து…..(4)
அம்பு மழை
நபி(ஸல்) மரணித்துவிட்டதாக ஸஹாபாக்கள் மத்தியில் காட்டுத் தீ போல் வதந்தி பரவியது. இச் செய்தி ஸஹாபாக்களுக்கு பெருந் திகைப்பை ஏற்படுத்தியது. வாளை தரையில் போட்டுவிட்டு ஒரு ஸஹாபி போர்களத்தில் வருத்தமாக நின்று கொண்டிருந்தார், அவரை சுற்றி போர் சூடுபிடித்திருந்தது. இதனைக் கண்ட மற்றொரு ஸஹாபி
‘ஏன் சண்டையிடாது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டார்.
அதற்கவர் ‘எங்களில் மிகச் சிறந்தவர் இறந்த பிறகு நாம் போராடி என்ன பயன்?’ என்றார்.
ரஸூல்(ஸல்) அவர்கள் காயமடைந்திருந்தார்கள். சில ஸஹாபாக்கள் அவர்களின் உயிர்களை பணயம் வைத்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். காபிர்களின் அம்பு மழை திடீர் என நபி(ஸல்) அவர்களை நோக்கி ஏவப்பட்டன. உடனே அபு தல்ஹா(ரலி) தனது இரு கைகளாலும் நபி(ஸல்) முகத்தை மறைத்துக் கொண்டார்கள். பல திசைகளில் இருந்தும் வந்த அம்புகள் அபு தல்ஹா(ரலி)யின் கைகளில் பாய்ந்தன. அவரால் வலியை தாங்கமுடியவில்லை. இரத்தப்போக்கும் வலியும் அதிகரித்துக் கொண்டே சென்றன. இருந்தபோதிலும் நபி(ஸல்) அவர்களின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த, ரத்தம் சொட்டும் தமது கைகளை தல்ஹா(ரலி) சற்றேனும் நகர்த்தவில்லை.
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)