அபூபக்கர்(ரலி) அவர்களின் நட்பு
சீறாவில் இருந்து…..(1)
அபூபக்கர்(ரலி) அவர்களின் நட்பு
(நபித்துவத்தின் பின் 13 ஆம் ஆண்டு.)
ஓர் இருள் கப்பிய இரவுப்பொழுது. ரஸூல்(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் மக்காவில் இருந்து மதீனாவுக்குச் செல்ல வெளியேறினார்கள். மதீனாவில் உள்ள மற்ற முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதே இப்பயணத்தின் நோக்கம். இரவு முழுவதும் நடந்தார்கள். அதிகாலை வேலையில் இருவரும் ஒரு குகையை நெருங்கினார்கள். அக்குகை தௌர் என அழைக்கப்பட்டது. காபிர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என அஞ்சி , காபிர்கள் தேடுவதை நிறுத்தும் வரை தௌர் குகையில் மறைந்திருக்க திட்டமிட்டார்கள்.