அதிலே அன்னப்பறவைக் கூட்டமொன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பறவை மிக அழகானது. எனவே தற்பெருமை கொண்டது. தன் அழகைப் பற்றிக் கூறி மற்றப் பறவைகளையும் சங்கடப்படுத்தியது.
ஒரு நாள், ஒரு வேடன், இந்த அன்னப் பறவைகளை எப்படியாவது பிடிக்க வேண்டுமென எண்ணி வலை வைத்தான். அவன் எண்ணியபடி அன்னப்பறவைக் கூட்டமே அதில் மாட்டிக்கொண்டாலும் கூட்டமே இணைந்து வலையைப் பிய்த்துக் கொண்டு தப்பியது.
சிறிது காலத்தின் பின் அந்த அழகான அன்னப்பறவை இவர்களோடு இருப்பது தனக்கு தரக்குறைவு என நினைத்தது. எனவே, கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தது. தனது அழகை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டே தனியாக வாழ்ந்தது.
இன்னொரு நாள் வேடன் வந்தான். தனியாக இருந்த அன்னப் பறவையைக் கண்டதும் “அன்று கூட்டத்தோடு தப்பினீர்கள் இன்று எப்படியாவது பிடிக்கலாம்” என்று வலை விரித்தான். அன்னப் பறவை மாட்டிக்கொண்டது. எந்த முயற்சி எடுத்தும் அந்த பெருமை பிடித்த அன்னப் பறவையால் தனியாக வலையை பிய்த்துத் தப்ப முடியவில்லை. அன்னத்தை பிடித்த வேடன் மகிழ்ச்சியோடு வீடு சென்றான்.
அன்புத் தம்பி தங்கைகளே! மற்றவர்களொடு ஒற்றுமையாக வாழ்ந்தால் யாருக்குமே எம்மை அழிக்க முடியாது. பெருமைப்பட்டவனுக்கு அழிவு நிச்சயம்.