இலங்கையின் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக AI
1 min readமுதல் முறையாக இலங்கையில் ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள் இருவரை அறிமுகம் செய்தது ரூபவாஹினி.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Intelligence) பயன்படுத்தி நேற்று இரவு இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச் செய்தது.
சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இது இலங்கை ஊடகப் பரப்பில் புதிய ஒரு பாய்ச்சலாக அமையும் என நம்புகிறேன்.
05 05 2024
இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் மொழியில் இரண்டு செய்தி வாசிப்பாளர்கள் மூலம் செய்தி அறிக்கையை ஒளிபரப்பி நேத்ரா அலைவரிசை சாதனை படைத்துள்ளது.
நேத்ரா அலைவரிசையின் செய்தி வாசிப்பாளர்களான தீபதர்சினி மற்றும் C.B.M.சியாம் ஆகியோரின் AI முகப் பதிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு பிரதான தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் இந்த AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்பஹான் சாப்தீன்
10 05 2024