அவதானம்!
1 min readஎனக்கு பல அநாமதேய அழைப்புகள் வந்துள்ளன. உங்களுக்கும் வந்திருக்கலாம். வரலாம். இப்படியாக உங்களுக்கு WhatsApp மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகள் விடயத்தில் அவதானமாக இருங்கள். WhatsApp இல் மாத்திரம் அல்ல. Facebook Friend Request ஆக Messenger இல் Hi என்ற Message ஆகக் கூட வரலாம்.
திடீர் Video Call ஆகவும் வரலாம். இந்த அழைப்புகள் Spam ஆகவும் வருகின்றன. குறிப்பாக Target செய்யப்பட்டும் வருகின்றன. இவற்றுக்கு நீங்கள் Response செய்யாமல் இருப்பதே நல்லது.
01. உங்கள் Response பிறகு தொடர் தொல்லையாக அமையும். பல்வேறு இலக்கங்களில் இருந்து அழைப்புகள் வர ஆரம்பிக்கும்.
02. உங்களுக்கு தேவையற்ற பாலியல் உள்ளடக்கங்களை அனுப்ப ஆரம்பிப்பர். அதனை வைத்து உங்களது Chat History ஐ பதிவு செய்து கொள்வர்.
03. உங்களுக்கு வீடியோ அழைப்பு வந்து நீங்கள் அழைப்புக்கு பதில் அளித்தால் உங்கள் முகம் சகிதம் மறுபக்க நிர்வாண நபர்களுடன் Chat செய்தது போல் Screen Record செய்து வீடியோக்களை உருவாக்கிவிடுவர்.
04. உங்களுக்கு வீடியோ அழைப்பு வந்து நீங்கள் அழைப்புக்கு பதில் அளித்தால் உங்கள் திரையில் மறுபக்கம் இருந்து பாலியல் காட்சி வீடியோக்களை காட்சிப் படுத்துவர். பின் உங்கள் முகங்களை பாலியல் காட்சிகளை இணைத்து உங்களை அச்சுறுத்துவர்.
05. AI முறை Deep Fake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களது முகங்களை மோசமான காட்சிகளுடன் இணைத்து பணம் கோரி அச்சுறுத்துவர். குறிப்பாக பெண்கள் அவதானமாக இருங்கள்.
06. அநாமதேய Link கள் வரும். அவை Phishing Attack கள். அவற்றை Click செய்வதின் மூலம் உங்கள் தரவு, தகவல்கள் திருடப்பட்டு, அவற்றை வைத்து பிரச்சினைகளை உருவாக்கலாம்.
07. உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். நான் ஒரு நிறுவனத்தின் அதிகாரி. நீங்கள் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று சொல்லி Message செய்வர். இது ஒரு Scam ஆகும். முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தி பின் மொத்தமாக பணத்தை மோசடி செய்வர்.
என்ன செய்யலாம்?
அநாமதேய அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்
அநாமதேய Link களை Click பண்ண வேண்டாம்!
அப்படியான இலக்கங்களை, கணக்குகளை Block செய்து விடுங்கள்!
அச்சுறுத்தல்கள் வந்தால் Screen Shot எடுத்துக் கொள்ளுங்கள்!
மானம் போகும் எனப் பயப்பட்டு உங்களுக்குள்ளே மறைத்துக் கொள்ளாதீர்கள்!
நம்பிக்கையான நபர்களிடம் சொல்லி ஆலோசனை பெறுங்கள்!
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அவர்கள் சொல்வது போல் செயல்பட ஆரம்பிக்காதீர்கள்!
முறைப்பாடு செய்ய வேண்டி ஏற்படின் முறைப்பாடு செய்யுங்கள்!
சமூக வலைதளங்களில் உள்ள Report செய்யக்கூடிய முறைகளைக் கையாளுங்கள்!
AI, Virtual Reality, Deep Fake போன்ற தொழில்நுட்பங்கள் உண்மை போன்றே தத்ரூபமான முறையில் படங்களை, காட்சிகளை உருவாக்கும் வகையில் வளர்ந்துள்ளன. அதேபோல் பண மோசடி உத்திகளும் பலவாறு நடைபெறுகின்றன. எனவே, மிக அவதானமாக செயல்படுவது அவசியமாகும். எமது கவனயீனம் எமக்கே ஆபத்தாக முடியலாம்.
இஸ்பஹான் சாப்தீன்
ஊடக பயிற்றுவிப்பாளர் 04.09.2023