கைப்பேசியில் அசையா வீடியோ பதிவு (Steady Shot)
1 min readதிறன் பேசியில் வீடியோ எடுக்கும் போது கை அசைவது தவிர்க்க முடியாத ஒரு சவால். இந்த சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்யவேண்டும். திறன் பேசி அசைந்தால் வீடியோ நேர்த்தியற்றதாகவும் பார்ப்பவர் கண்களுக்கு கஷ்டமாகவும் இருக்கும். எனவே, முடிந்தளவு கைகளை அசைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கைகள் அசைவதை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தால் திறன் பேசியை இரண்டு கைகளாலும் பிடித்து நெஞ்சுக்கு அல்லது உடலுக்கு நெருக்கமாக்கிப் பிடி்துக் கொள்ள வேண்டும். அசையாமல் வீடியோ அமையுமாயின் அதனை Stabilize Shot என அழப்போம்.
Stabilizer என்ற Option சில திறன்பேசிகளில் காணப்படுகின்றன. ஆனால், இந்த Option மூலம் முழுமையாக அசைவை குறைக்க முடியாது. ஓரளவு தணிக்கலாம். அதே சமயம் எடுத்த வீடியோவை Edit செய்யும் போது Editing Software இல் இதே Stabilize Option இருக்கும். இதன் மூலமாகவும் அசைவை இல்லாமல் செய்ய முடியாது.
எனவே, நாம் வீடியோவை பதிவு செய்ய முன்பே Steady Shots களை எடுத்துக் கொள்ள திட்டமிடவேண்டும். அதற்காக வேண்டியே நாம் Tripod பயன்படுத்துகிறோம். பல வகையான Mobile Tripod கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. Height Tripod முதல் Mini Stool Tripod வரை பல்வேறு அளவுகளில் உண்டு. அதே நேரம் Movable, Fixed என நமது வசதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். அது தவிர Selfy Sticks ஐப் பயன்படுத்தியும் Steady Shots Shoot செய்ய முடியும்.
நாம் நடந்துகொண்டோ அல்லது அசைந்து கொண்டோ எடுக்கும் வீடியோக்கள் Perfect Steady Movement உடன் இருக்க வேண்டும் என்றிருந்தால் அதற்காகவும் பல Stabilize கருவிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக Mobile Gimbal இதற்கு சிறந்த ஒரு கருவியாகும்.
Steady Shot அல்லாமல் ஒரு Shot அசைந்து கொண்டு இருக்கும் என்றிருப்பின் சில போது அந்த Shot சில போது தாக்கம் செலுத்தக்கூடிய சிறந்த Shot ஆகவும் இருக்க முடியும். அது குறிப்பிட்ட சந்தர்ப்பத்தைப் பொருத்தே அமையும். அது குறித்த ஊடகவியலாளனின் புத்தாக்கத் திறனைப் பொருத்தும் அமையலாம்.
ஒரு பதட்டமான சூழல் நிகழ்கின்ற சந்தர்ப்பத்தில் அல்லது குறித்த நபர் தடுமாற்றத்துடன் நடக்கும் போது இதனை காட்சி உளவியல் மூலம் மக்களுக்கு உணர்த்த Steady இல்லாத Shots உம் சிறந்ததாக அமையலாம்.