இலக்கியம்: அறிமுகம்
1 min readஇஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கியம்.
இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு பலரும் பலவாறு வரைவிலக்கணம் கூறுவர். ஜீ.கே. செஸ்டர்டன் (G.K. Chesterton 1874-1936) இலக்கியம் குறித்து இப்படிக் கூறுகிறார்.
‘மொழியின் வாயிலாக கொண்டு படைக்கப் பெறும் கலையே இலக்கியம். அது வியப்பூட்டும் அற்புத நிகழ்ச்சி போன்ற ஒரு கலை. ஒரு மனிதன் என்ன நினைக்கிறானோ அதை அழகுற வெளிப்படுத்தும் மொழியாலாகிய கலை.’ இலக்கியம் காலத்தின் கண்ணாடி. ஒரு இலக்கியவாதி, தான் வாழும் காலத்தில் தனது பிரயோகங்களையும் படைப்பியல் உத்திகளையும் கலைப் போக்குகளையும் பிரதிபளிப்பவன். இலக்கியத்தின் ஊடாக பல மாறுதல்களை சமூக தளத்தில் ஏற்படுத்துபவன். அவனின் இலக்கியம் வெகுசன பொதுக் கருத்துக்களை உருவாக்கும் ஆயுதம்.