மர்ஹூம் I.A.காதர்.
1 min readகாலி-மண் மறக்காத மனிதர்-02
அரசியல் தளத்தில் மர்ஹூம் I.A.காதர்.
காலி மாநகரில் பிறந்து வளர்ந்த முக்கியமான அரசியல்வாதிகளுள் மர்ஹூம் I.A.காதரும் ஓருவர். அரசியல் துறையில் தன்னால் இயன்ற பல செயற்பாடுகளை இவர் செய்துள்ளார்.
இவர் 1917ல் காலி- சோலையில் பிறந்தார். பிரபல மாணிக்க வர்த்தகர் மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் புதல்வர்களுள் ஒருவர். இவர் ஆரம்பக்கல்வியை காமல்ஹருஸுல்ஹியா தேசிய பாடசாலையில் பெற்றார். இவர் ஒரு சட்டத்தரணியாக தொழில் புரிந்தவர். பல வருடங்கள் இலங்கை செனட் சபையிலும் அங்கம் வகித்துள்ளார்.
சமூக சேவையில் ஈடுபாடு காட்டிய இவர், 1960ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பேருவளை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1970 முதல் 1976 வரை இலங்கை பாராளுமன்றத்தில் உப சபாநாயகராகவும் கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 16 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டு 1976ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை அரசாங்கத்தின் தூதுவராக ஐக்கிய அரபுக்குடியரசிற்கு (மிஸ்ர்) அனுப்பப்பட்டார்.
அத்தோடு இலங்கை பைத்துல்மால் நிதியத்தில் சில காலம் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 1979ஆம் ஆண்டு I.A.காதர் அவர்கள் இறையடி சேர்ந்தார். இவரின் அரசியல் வாழ்கையின் முக்கிய அம்சம் என்னவெனில் இவர், எந்த மேடையில் ஏறினாலும் பிறந்த மண்ணை மறக்காது நான் காலியைச் சேர்ந்தவன் என்று கூற மறக்கமாட்டார்.
தினகரன் 1976.08.17