அவர்கள் வருவார்கள். காரிறங்கி வருவார்கள். மனமிறங்க மாட்டார்கள்.வெள்ளையற்ற உள்ளம், வெள்ளை காட்டி, வெள்ளை உடுத்தி வருவார்கள்.கைகொடுக்க மாட்டார்கள் கை தூக்கியும் கைகூப்பியும் வருவார்கள்.மாடி வீட்டில் மடிந்தும் குடிசை...
கவிதை
இலை துளிர்க்கும் ஏப்ரலில்-என் இதயம் துளிர்த்த அந்த ஏழு நாட்கள்.உறவு தேடி கடல் விட்டு உயர் நிலத்தில் பாய்ந்தேன்.தேயிலை நோண்டும் இளந்தென்றல் என் இதயத்தையும் நோண்டியது.பைனஸ் காட்டுக்குள்...
கூப்பிடும் சப்தம் கேட்கிறதுகூடைக்குள்ளிருந்து..! குனிந்து பார்க்கிறேன்குப்பைக்குள் குழந்தை...? தொட்டில் எப்படிதொட்டியாகும்...? றோஜாப்பூ எப்படிநெருப்பாகும்...? சொந்தக்காரர்களேசொல்லுங்கள். இஸ்பஹான் சாப்தீன்2006.02.05கவிதைப் பூங்கா,தினகரன்.(குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு குழந்தைச் செல்வம் கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு எழுந்த எண்ணங்கள்)
உப்பு நீருடன் கலந்தஉம் கண்ணீர்த் துளிகளையும்... அலைச் சப்தத்துடன் கலந்தஓலச் சப்தங்களையும்... மண்ணுடன் கலந்தமனித உடல்களையும்... மீன் பிடிக்கும்மீனவனுக்கும்... பேனை பிடிக்கும்மாணவனுக்கும்...உயிர் தப்பியஉறவுகளுக்கும்... கடல் தரிசித்தகட்டுகொடைக்கும்... மறக்க முடியாதுமறக்கடிக்கவும் முடியாது..! (காலி- கட்டுகொடையில் சுனாமிக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட...
தீயை மூட்டவும்ஊதுகிறாய்..!தீயை அணைக்கவும்ஊதுகிறாய்..!எப்படிஒரே காற்றால்முரண் செயல்செய்கிறாய்..?நான்ஏற்றுக் கொள்கிறேன்நீ விசித்திரமானவள் தான்.இஸ்பஹான் சாப்தீன்.
உறவுகளைதொலைத்துதொலைவுகளைதொடர்பு படுத்தியவிஞ்ஞானம்.கூட்டத்திலும்தனிமையைஉணர்கிறேன்..!இது என்மெஞ்ஞானம்.இஸ்பஹான் சாப்தீன்
ஒரு பின் மாலைப் பொழுது...மரங்களின் நடுவே மண்பாதை...மேனி தழுவும் மென் காற்று...தூரத்துப் பனிச்சாரல்...மங்களாய் ஒரு பெட்டிக் கடை...எங்கோ கசியும் மெல்லிசை...மலையோர மண்வாசம்...தனியாய் நடக்கிறேன்...நினைவுகளோடு நான்!இஸ்பஹான் சாப்தீன்.
குழப்படியானபையனைவகுப்புத் தலைவனாக்கிஅடக்கி வைக்கும்யுக்தியைஎங்கேயடி கற்றாய்..?'காதலன்'பதவி தந்துஎன்னைஅடக்கிவிட்டாயே!இஸ்பஹான் சாப்தீன்.2012.06.03
காதல்...!கடும் சூராவளியின்பின் வரும்மெல்லிய அமைதி!உன்னோடுசண்டையிட்டுப் பிரிந்துசில கணங்களில்அது வருகிறது!வா சண்டையிடுவோம்காதலுக்காக...!கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்2012.06.03
ஏர் தூக்கிஎட்டுப் போட்டஉந்தன்மரக்குற்றிக்கட்டுடம்பும்,சூரியன் தயாரித்தமுதற்தரஎண்ணையாம்..வியர்வை படிந்தஉந்தன்பளிச்சிடும்கறு நிறமும்,மேடையில்..உள்ளாடையுடன்உடம்பு காட்டும்ஆணழகனைதோற்கடிக்கிறதுஉழவனே!இஸ்பஹான் சாப்தீன்,கவிதை அரங்கம்- தினகரன்.2005.12.17