2) புத்தகங்களோடு பழகுகிறேன்…!
1 min read 2) நான் புத்தகங்களோடு பழகுகிறேன்…!
‘புத்தகங்கள்,
நல்ல நண்பர்கள்’ என்பர்.
நண்பர்களற்ற நபர் இருக்க முடியாது.
அவன்,
துன்பத்தில்
இணையாக இருப்பான்.
இன்பத்தில்
துணையாக இருப்பான்.
‘தோள் கொடுப்பவன் தான்
தோழன்‘ என்பர்.
அவன்,
கஷ்டத்தில்
உதவுவான்,
நஷ்டத்தில்
பழகுவான்.
‘நண்பன் இருந்தால்
எல்லாம் ‘இலவசம்‘ என்பர்.
அவன் ‘வாசம்’ எதுவோ
அது,
அவன் ‘வசம்’ எதுவோ
அது,
நமக்கு இலவசமாய் கிடைக்கிறது.
எனவே,
‘நண்பன் சகவாசம்
தரும் எல்லாம்
இலவசம்.’
‘சிநேகிதன்
சுயநலமியாக மாட்டான்’ என்பர். அவன்,
நல்லதை
சுட்டிக் காட்டுவான்.
கெட்டதை
குட்டிக் காட்டுவான். ‘உன் நண்பனைக் காட்டு,
உன்னை அறிந்துகொள்வேன்’ என்பர்.
‘அவன்,
அத்தர் வியாபாரியாயின்
அவன் ‘வாசம்’
உன்னில் வீசும்.
அவன்,
துருத்தி வியாபாரியாயின்
அவன் புகை
உன்னில் புகையும்.‘
(ஹதீஸ்)
‘என் மனதுக்குகந்த
நூல்களை மட்டும் கொடுத்து
என்னை,
என் வாழ்வு முழுதும் சிறையிட்டால்,
நான் கஷ்டப்பட மாட்டேன்‘
என்கிறார் ‘மாஜினி’
‘ஷெக்ஸ்பியர்’
இப்படிப் பெருமைப்படுகிறார்;
‘என்னையா ஏழை என்கிறாய்?
என்னிடமுள்ள நூல்கள்,
இராஜ்ஜியத்தினும் உயர்ந்தன அல்லவா?‘
‘புத்தகங்கள்,
நல்ல நண்பர்கள்’ என்பர்.
நண்பர்களற்ற நபர் இருக்க முடியாது.
அவன்,
துன்பத்தில்
இணையாக இருப்பான்.
இன்பத்தில்
துணையாக இருப்பான்.
‘தோள் கொடுப்பவன் தான்
தோழன்‘ என்பர்.
அவன்,
கஷ்டத்தில்
உதவுவான்,
நஷ்டத்தில்
பழகுவான்.
‘நண்பன் இருந்தால்
எல்லாம் ‘இலவசம்‘ என்பர்.
அவன் ‘வாசம்’ எதுவோ
அது,
அவன் ‘வசம்’ எதுவோ
அது,
நமக்கு இலவசமாய் கிடைக்கிறது.
எனவே,
‘நண்பன் சகவாசம்
தரும் எல்லாம்
இலவசம்.’
‘சிநேகிதன்
சுயநலமியாக மாட்டான்’ என்பர். அவன்,
நல்லதை
சுட்டிக் காட்டுவான்.
கெட்டதை
குட்டிக் காட்டுவான். ‘உன் நண்பனைக் காட்டு,
உன்னை அறிந்துகொள்வேன்’ என்பர்.
‘அவன்,
அத்தர் வியாபாரியாயின்
அவன் ‘வாசம்’
உன்னில் வீசும்.
அவன்,
துருத்தி வியாபாரியாயின்
அவன் புகை
உன்னில் புகையும்.‘
(ஹதீஸ்)
‘என் மனதுக்குகந்த
நூல்களை மட்டும் கொடுத்து
என்னை,
என் வாழ்வு முழுதும் சிறையிட்டால்,
நான் கஷ்டப்பட மாட்டேன்‘
என்கிறார் ‘மாஜினி’
‘ஷெக்ஸ்பியர்’
இப்படிப் பெருமைப்படுகிறார்;
‘என்னையா ஏழை என்கிறாய்?
என்னிடமுள்ள நூல்கள்,
இராஜ்ஜியத்தினும் உயர்ந்தன அல்லவா?‘
“17 -வது வயதில் எனக்கு ஒரு நண்பன் அறிமுகமானான்.
இன்று வரை அவன் எனக்கு உறுதுணையாக இருக்கின்றான்.
அது வேறு யாருமல்ல புத்தகங்கள் தான்.“
இது ‘அப்துல் கலாம்.’
இறுதியாய்…
புது அகம் கொண்ட பக்கங்கள்
‘புத்தகங்கள்’
நல் அகம் கொண்ட நபர்கள்
‘நண்பர்கள்’
புத்தகங்கள்,
நல்ல நண்பர்கள்
புத்தகங்களோடு
பழகுகிறேன்.
மனிதர்கள் எல்லோரும்
எனக்கு நண்பர்கள்.
நண்பர்கள்,
நல்ல புத்தகங்கள்.
நண்பர்களை
வாசிக்கிறேன்.
இஸ்பஹான் சாப்தீன்
2011.01.01
இஸ்பஹான் சாப்தீன்
2011.01.01