அனர்த்த முகாமைத்துவம் (களத்தில் பணியாற்றுவோருக்கானது)
அனர்த்த முகாமைத்துவம் (களத்தில் பணியாற்றுவோருக்கானது)
வெள்ளம் இருக்கும் போது,
01. நீர் மட்டம் உயருமாயின் வீடுகளில் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வசதி செய்தல்.
02. உணவுப் பொதிகள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பால்மா போன்றவற்றை விநியோகித்தல்.
03. மருந்துகள் மற்றும் ஏனைய முதலுதவிகளுக்கான ஏற்பாடுகளை செய்தல்.
வெள்ளம் வற்றியதும்,
04. வீடுகளை சுத்தம் செய்ய அவசியமான உபகரணங்கள் மற்றும் ஏனையவவற்றை வழங்கல்.
05. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசியமான பொருட்களை விநியோகித்தல்.
06. வெள்ளம் பாதித்த இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல்.
தொடர் பணியாக,
07. நீர் தேங்கி இருக்கும் இடங்களில் நுளம்பு பெருகாமல் இருக்க நடவடிக்கை எடுத்தல்.
08. பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் உற்பட உபகரணங்களை வழங்கல்.
09. உலர் உணவு மற்றும் சமயலறைப் பொருட்களை விநியோகம் செய்தல்.
அழைப்பெடுத்து விசாரித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
இஸ்பஹான் சாப்தீன்
03 06 2024
படம்: 2016 வெல்லம்பிடிய, வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் போது களப்பணியில்…