எனக்கும் ‘ஒரு சுயம்’
ஒரு கையால்
அபத்தை மறைத்தபடி,
மறுகையால் விரலை
ருசித்தபடி நிற்கும்
ஒரு தெருவோரச்
சிறுவனாய்…
அபத்தை மறைத்தபடி,
மறுகையால் விரலை
ருசித்தபடி நிற்கும்
ஒரு தெருவோரச்
சிறுவனாய்…
அல்லது,
கிழிந்த பாவாடையை
சரி செய்தபடி
‘அவருக்காய்’
காத்திருக்கும்
ஒரு ராப்பிச்சைக் காரியாய்…
அல்லது,
பயணத்தில்
பக்கத்து இருக்கையில்
‘அவள்’ உரசுகையில்,
அறியாப் பருவத்தில்
விரும்பிக் கட்டிய
காவியுடையை
முறைத்துக் கொள்ளும்
ஒரு பிக்குவாய்…
அல்லது,
பருத்த மார்பகங்களை
அதிசயமாய்ப்
பார்த்தபடி
கேவிக் கேவி அழும்
சேயைச் சுமந்த
ஒரு குழந்தைத் தாயாய்…
உள்ளது,
எனக்கும் ‘ஒரு சுயம்’
அதோ…
அங்கே…
மலர்களைக் கொய்தபடி,
முற்களில் நடந்தபடி
ஒரு புனித யாத்திரையில்…
இஸ்பஹான் சாப்தீன்
2010
(ஓரத்து சமூகங்கள்
தரும் ஈரமான வரிகள்)