இஸ்லாமிய இலக்கியமும் தமிழும் இணைந்தன…
1 min readஇஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு
இஸ்லாமிய இலக்கியமும் தமிழும் இணைந்தன…
இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழ் மொழியில் வெளிவந்தமையால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுவது கட்டாயமானது. இஸ்லாமிய இலக்கியமும் தமிழும் இணைந்ததால் தமிழ் மொழியிலும், தமிழ் இலக்கிய மரபிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இதனால் தமிழுக்கு புதுக் கவர்ச்சியும் உயிரும் கிடைத்தது.
01) மரபு தழுவிய படைப்புகள்:
தமிழ் இலக்கிய மரபில் அடையாளங் காணப்பட்டுள்ள 96 சிறு நூல் பிரபந்த முறைகளிலும் முஸ்லிம் புலவர்கள் இலக்கியம் படைத்துள்ளனர்.
பிள்ளைத் தமிழ்
மாலை
அந்தாதி
அம்மானை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
(படம்-01)
02) நவ முறை படைப்புகள்:
தமிழ் மரபில் அதுவரை காலமும் வெளிவராத மற்றும் தமிழ் இலக்கிய மரபுக்கு அந்நியமான பல உத்திகளிலும் முஸ்லிம் புலவர்கள் இலக்கியங்கள் படைத்தனர். அவற்றுள் அடையாளங் காணப்பட்ட முறை வழிகளாக,
கிஸ்ஸா,
மஸ்அலா,
முனாஜாத்,
படைப்போர்,
நாமா,
நொண்டி நாடகம் போன்றன காணப்படுகின்றன.
03) நவ சொற் பதங்கள்:
முஸ்லிம் புலவர்களினால் அரபு, உருது, பாரசீகம் போன்ற மொழிகளில் இருந்து பரவலாக பல சொற்கள் இலக்கிய வழி புகுந்து தமிழன்னைக்கு அணி சேர்த்தன. உதாரணமாக “இஸ்லாம், சிர்க், குப்ர், சக்கு, நாமா” போன்ற பலநூறு சொற்களைக் காணலாம். இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்ட பிறமொழி சொற்களை தொகுத்து ஒரு அகராதியை பேராசிரியர் மா.மு.உவைஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
04) ‘அரபுத் தமிழ்’ தோற்றம்.
இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகளுடன் தொடர்பான பலதும் அரபு மொழியுடன் இருப்பதால் அரபு மொழிச் சொற்களை இலக்கியங்களில் அதிகம் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் புலவர்களுக்கு ஏற்பட்டது. இதன் உச்சகட்டமாக, தமிழும் அரபும் ஒன்றிணைந்து புதிய ஒரு கருத்துப்பரிமாற்ற எழுத்துமொழியாக அரபுத்தமிழ் தோன்றியது. தமிழ் மொழியை அரபு எழுத்துச் சுவடியில் எழுதும் முறையையே அரபுத் தமிழ் என அழைப்பர்.