அஹதிய்யா இயக்கத்தின் ஆரம்பகர்த்தா சட்டத்தரணி M.H.A.அஸீஸ்
1 min readகாலி-மண் மறக்காத மனிதர்-03
அஹதிய்யா பாடசாலை என்றால் இலங்கையில் யாரும் அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், அஹதிய்யா எப்படி உருவானது. அதன் ஆரம்பம் யாரால், எப்போது என்பது பெரும்பாலோர்க்கு தெரியாது.
இற்றைக்கு ஆண்டுகளுக்கு முன் நமது இலங்கைத் தீவில் பல இனமக்களுக்கு மத்தியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு, இஸ்லாமியக் கல்வி அறிவையும், இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளையும் நிர்வாக தரத்தில் பெற்றுக் கொள்வதற்கு கல்வி நிலையங்கள் இருக்கவில்லை. அதேபோல் தமிழ் மொழிக்கு அப்பால் வேறு எந்தமொழிகளிலும் இஸ்லாமியக் கல்வி அறிவை பெற மத்ரஸா கல்வி அமைப்பிலோ, பள்ளிவாயல்களின் போதனா முறைகளிலோ தனித்த ஒரு அமைப்பு இருக்கவில்லை.