என் சொல் இணைவுகளால்உருவான இப் பிணைவுகள்என் இறந்த நினைவுகளின்வாடையை அதிகமாய்சுமந்திருக்கிறது.சொல்ல முடியாதஉணர்வுகளின் பாசையைகவியூடகத்தால்துயர வரி கொண்டுஇறக்கி வைக்கிறேன்.இப்படியாக...புரட்டும் பக்கமெல்லாம்பெண் பற்றியவர்ணிப்புகள் பிரமாதம்புலரும் வாழ்வின்ஒவ்வொரு நொடியிலும்எனக்கோபுறக்கணிப்புகள் ஏராளம்!பாரதி கண்டபுதுமைப்...
கவிதை
உன் தலைகோதி விடைபெறத் திரும்புகையில் மீண்டும் என் கைபற்றி பூமி பார்த்து மௌனிப்பாயே..! அத் தருணங்களில்...அன்பே.. நான் புதுக் காதலனாக மாறி விடுகிறேன்.
ஒரு கையால்அபத்தை மறைத்தபடி,மறுகையால் விரலைருசித்தபடி நிற்கும்ஒரு தெருவோரச்சிறுவனாய்...அல்லது,கிழிந்த பாவாடையைசரி செய்தபடி'அவருக்காய்'காத்திருக்கும்ஒரு ராப்பிச்சைக் காரியாய்...அல்லது,பயணத்தில்பக்கத்து இருக்கையில்'அவள்' உரசுகையில்,அறியாப் பருவத்தில்விரும்பிக் கட்டியகாவியுடையைமுறைத்துக் கொள்ளும்ஒரு பிக்குவாய்...அல்லது,பருத்த மார்பகங்களைஅதிசயமாய்ப்பார்த்தபடிகேவிக் கேவி அழும்சேயைச் சுமந்தஒரு...
முட்டையோடு வெடித்தால்உயிர் வரும்,புவியோடு வெடித்தால்உயிர் போகுமெனநானறியேன்! வலை வீசினால்மீன் கிடைக்கும்,அலை வீசினால்பிணம் கிடக்குமெனநானறியேன்! வரப்புயரநீருயரும்,வரம்புமீறஅலையுயருமெனநானறியேன்! கவிஞர் இஸ்பஹான் ஷாப்தீன் (சுனாமி பாதிப்பிற்குப் பின் 2005 ல் "காலி எப்.எம்" ல் வாசித்த கவிதை)
எனக்கொருமனைவி தேவை! அவள்,இந்த உலகத்துக்குஅழகானவளாகஇருக்கத் தேவையில்லை..! என் உலகத்தைஅழகாக்குபவளாகஇருக்க வேண்டும்...! அவளே...என் உலக அழகி! இஸ்பஹான் ஷாப்தீன் 2012.04.10 (ஆங்கிளக் கூற்றொன்றைத் தழுவி எழுதிய கவிதை)
'புரியாத பிரியம்பிரியும் போதுபுரியும்' என்பர்.புரிந்த பிரியம்பிரியும் போதுஎரிகிறது என்னிதயம்...இறைவனுக்காய்க்கொண்ட உறவில்பிரிவென்பது பொய்யாகிறது.நானும் நீயும்முடிச்சிடப்பட்ட ஒரு கயிற்றின்இரு அந்தங்கள்தூரமாகும் போதுதான்இறுகுகிறது...நம் உறவு முடிச்சுஅதிகமாய்த்தூரமாகிஅறுத்துவிடாதே...!இருப்பினும்...பிரிவுகள் நிரந்தரமல்ல.மீண்டும் சந்திக்கலாமே...அவனர்ஷின் நிழலில்...மஹ்ஷர் வெளியில்...20090301
ஒரு வர்த்தி ஒளி,ஒரு மூக்குக் கண்ணாடி,ஒரு பேனை,ஒரு வெள்ளைக் காகிதம்,நிசப்தமான அறை,யன்னலோர சாய்வு நாற்காலி,ஏகாந்தப் பெருவெளி,இருள் கப்பிய வானம்,மிருகக் கண்களாய் நட்சஸ்திரம்,அணைக்கத் துடித்தபடிஉன் நினைவுகள்.இது என் அழகிய...
விடுதியில்அதிகம் தூங்குபவன் நான்.நண்பன் ஏசிக்கொண்டே இருப்பான்.அவனுக்குத் தெரியாதுஎன் காதலிகனவென்று.