உறவுகளைதொலைத்துதொலைவுகளைதொடர்பு படுத்தியவிஞ்ஞானம்.கூட்டத்திலும்தனிமையைஉணர்கிறேன்..!இது என்மெஞ்ஞானம்.இஸ்பஹான் சாப்தீன்
Isbahan Sharafdeen
ஒரு பின் மாலைப் பொழுது...மரங்களின் நடுவே மண்பாதை...மேனி தழுவும் மென் காற்று...தூரத்துப் பனிச்சாரல்...மங்களாய் ஒரு பெட்டிக் கடை...எங்கோ கசியும் மெல்லிசை...மலையோர மண்வாசம்...தனியாய் நடக்கிறேன்...நினைவுகளோடு நான்!இஸ்பஹான் சாப்தீன்.
குழப்படியானபையனைவகுப்புத் தலைவனாக்கிஅடக்கி வைக்கும்யுக்தியைஎங்கேயடி கற்றாய்..?'காதலன்'பதவி தந்துஎன்னைஅடக்கிவிட்டாயே!இஸ்பஹான் சாப்தீன்.2012.06.03
காதல்...!கடும் சூராவளியின்பின் வரும்மெல்லிய அமைதி!உன்னோடுசண்டையிட்டுப் பிரிந்துசில கணங்களில்அது வருகிறது!வா சண்டையிடுவோம்காதலுக்காக...!கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்2012.06.03
ஏர் தூக்கிஎட்டுப் போட்டஉந்தன்மரக்குற்றிக்கட்டுடம்பும்,சூரியன் தயாரித்தமுதற்தரஎண்ணையாம்..வியர்வை படிந்தஉந்தன்பளிச்சிடும்கறு நிறமும்,மேடையில்..உள்ளாடையுடன்உடம்பு காட்டும்ஆணழகனைதோற்கடிக்கிறதுஉழவனே!இஸ்பஹான் சாப்தீன்,கவிதை அரங்கம்- தினகரன்.2005.12.17
என் சொல் இணைவுகளால்உருவான இப் பிணைவுகள்என் இறந்த நினைவுகளின்வாடையை அதிகமாய்சுமந்திருக்கிறது.சொல்ல முடியாதஉணர்வுகளின் பாசையைகவியூடகத்தால்துயர வரி கொண்டுஇறக்கி வைக்கிறேன்.இப்படியாக...புரட்டும் பக்கமெல்லாம்பெண் பற்றியவர்ணிப்புகள் பிரமாதம்புலரும் வாழ்வின்ஒவ்வொரு நொடியிலும்எனக்கோபுறக்கணிப்புகள் ஏராளம்!பாரதி கண்டபுதுமைப்...
உன் தலைகோதி விடைபெறத் திரும்புகையில் மீண்டும் என் கைபற்றி பூமி பார்த்து மௌனிப்பாயே..! அத் தருணங்களில்...அன்பே.. நான் புதுக் காதலனாக மாறி விடுகிறேன்.
'உமர்(ரழி) அவர்களும் அபூபக்கர்(ரழி) அவர்களும் 'ஸலாம்' சொல்வதில் போட்டி போட்டுக் கொண்டார்கள்.' எதற்காக இந்தப் போட்டி? இரு மனிதர்கள் முகமனுக்காய் பரிமாறும் ஒரு வாசகத்திற்காக போட்டி போடுவதா?...
2) நான் புத்தகங்களோடு பழகுகிறேன்...! 'புத்தகங்கள், நல்ல நண்பர்கள்' என்பர். நண்பர்களற்ற நபர் இருக்க முடியாது. அவன், துன்பத்தில் இணையாக இருப்பான். இன்பத்தில் துணையாக இருப்பான்....
ஒரு கையால்அபத்தை மறைத்தபடி,மறுகையால் விரலைருசித்தபடி நிற்கும்ஒரு தெருவோரச்சிறுவனாய்...அல்லது,கிழிந்த பாவாடையைசரி செய்தபடி'அவருக்காய்'காத்திருக்கும்ஒரு ராப்பிச்சைக் காரியாய்...அல்லது,பயணத்தில்பக்கத்து இருக்கையில்'அவள்' உரசுகையில்,அறியாப் பருவத்தில்விரும்பிக் கட்டியகாவியுடையைமுறைத்துக் கொள்ளும்ஒரு பிக்குவாய்...அல்லது,பருத்த மார்பகங்களைஅதிசயமாய்ப்பார்த்தபடிகேவிக் கேவி அழும்சேயைச் சுமந்தஒரு...