நபி(ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அன்பு!
சீறாவில் இருந்து…..(3)
நபி(ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அன்பு!
அது ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு. உஹதுப் போர்க்களம். பத்ர் போரில் தோல்வி அடைந்ததற்கும் பல தலைவர்கள் கொல்லப்பட்டதற்கும் முஸ்லிம்களை பலிவாங்கும் வெறியோடு மக்கா எதிரிகள் 3000 பேர் படை திரண்டு வருகிறார்கள்.
முஸ்லிம்களுக்கும் மக்காக் காபிர்களுக்கும் உஹது மலை அடிவாரத்தில் யுத்தம் தொடங்குகிறது. முதலில் முஸ்லிம்கள் வெற்றி பெறுகிறார்கள். எனவே, காபிர்கள் புறமுதுகிட்டு மக்காவுக்கே திரும்பியோடி விட்டார்கள் என்று எண்ணினார்கள். இருப்பினும், வில்லாலர்கள் விட்ட சிறு தவறால் முஸ்லிம்கள் எதிர்பாராத விதமாக காபிர்களின் பாரியதொரு தாக்குதலை முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. உஹத் மலைக்கு பின்னால் இருந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று எண்ணி சந்தோசக் களிப்பில் இருந்த முஸ்லிம்களுக்கு இத்தாக்குதல் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் அங்கும் இங்குமாக சிதறியோடினார்கள். காபிர்களின் படை, நாளாபுறமிருந்தும் நபி(ஸல்) அவர்களையும் தாக்கியது. நபி(ஸல்) அவர்களுக்கு சிறிது காயம் ஏற்பட்டது. இருப்பினும், நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவே வதந்தி பரவியது. இதனைக் கேட்ட முஸ்லிம்கள் மனமுடைந்து போனார்கள். நபி(ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அன்பு முஸ்லிம்களை பெருங்கவலையில் ஆழ்த்தியது. யுத்தகளத்தில் சோர்ந்து போனார்கள். பலர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காது உயிரைவிடவும் தயாராகிவிட்டார்கள்.
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)