December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

2023 நம்மை விட்டும் நகர்கிறது.

1 min read

2023 நம்மை விட்டும் நகர்கிறது. 2023 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி முஸ்லிம் சேவையில் நான் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிய அனைத்து வளவாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும், விளம்பர முகவர்களுக்கும் மற்றும் அன்பு நேயர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

திங்கட்கிழமை:

சட்டம் தெளிவோம் (சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சி)

செவ்வாய்க்கிழமை:

நூல் உலா (வாசகசாலையில் ஒரு பயணம்)

புதன்கிழமை:

தித்திக்கும் திருக்குர்ஆன் (அல்குர்ஆனியக் கற்கைகள்)

வியாழக்கிழமை:

திசைகாட்டி (வாழ்வை வெல்வதற்கான வழிகாட்டி)

வெள்ளிக்கிழமை:

மிம்பர் பிரசங்க மேடை (சமூக, சமய, கலாசார செய்திகள்)

சனிக்கிழமை:

முஸ்லிம் உலகம் (உலக செய்திகளின் தொகுப்பு)

ஞாயிற்றுக்கிழமை;

தெளிவு (காலத்திற்கேற்ற தெளிவு)

மற்றும் பல நிகழ்ச்சிகள், அவ்வப்போது விசேட நிகழ்ச்சிகள், தொகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து வழங்கக் கிடைத்தது. 2023 இல் புதிய பலரை அறிமுகம் செய்ய, புதிய விடயங்களைப் பேச, புதிய மனிதர்களை சந்திக்க, புதிய விடயங்களைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

2024 நிர்வாக ஆண்டு ஆரம்பமாகிறது. இந்த வருடமும் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க, புதிய விடயங்களைப் பேச, புதிய நபர்களை அறிமுகம் செய்ய எண்ணியுள்ளேன். அந்த வகையில் இதற்கு முன்னர் ஒத்துழைப்பு நல்கியவர்களும் மற்றும் புதியவர்களும் கைகோர்க்க முடியும். இறைவன் நாடினால் மிகத் தரமான நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி முஸ்லிம் சேவை மற்றும் கந்துரட்ட FM முஸ்லிம் சேவை ஊடாக வழங்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. ஒத்துழைப்பு நல்கிய, கைகோர்க்க உள்ள அனைவருக்கும் மற்றும் பணிப்பாளர் உற்பட சக அலுவலக நண்பர்களுக்கும் நன்றி கூறி இந்த 2023 ஐ வழியனுப்பி, வரும் 2024 நிர்வாக ஆண்டை வரவேற்கிறேன்.

இஸ்பஹான் சாப்தீன்,

தயாரிப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

31.12.2023

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.