அகவிழி சஞ்சிகை வெளியீட்டில் பிரதம பேச்சாளராக…
1 min readCreative Pool குழுமத்தின் 3 ஆவது வருட பூர்த்தி நிகழ்ச்சியும் 3 ஆவது அகவிழி சஞ்சிகை வெளியீட்டு வைபவமும் அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தேன். இதன்போது, அரங்கம் நிறைந்த சபையில் தகவல் யுகமும் இளைஞர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பில் ஓர் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது.
அன்றைய தினம், போட்டி நிகழ்ச்சிகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல், CP விருதுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை கெளரவித்தல் மற்றும் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.