வெலிகாமம் அஸ்ஸபா பொன்விழா அறிவுக் களஞ்சியம்
வெலிகாமம் – மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் பொன்விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதி நிகழ்வான மாபெரும் கலை விழாவும், மதுரம் 50 நூல் வெளியீடும் அண்மையில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர் தலைமையில் இடம்பெற்றது.
தென் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற அறிவுக் களஞ்சியம் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான அணிகளுக்கிடையிலான போட்டியை ஊர்மக்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்வை ஆயிரக் கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.