CEDO கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக…
மாத்தறையில் இயங்கி வரும் கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பு தமது அங்கத்தவர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் அடைந்துள்ள சாதனைகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வை அண்மையில் அதன் கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடாத்தியது.
இந்நிகழ்வில், கல்வியின் முக்கியத்துவமும் இலக்கு நோக்கிய பயணமும் என்ற தலைப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. தரம் ஒன்று முதல் பல்கலைக்கழக தெரிவு வரை பல்வேறு அடைவுகளைக் கண்டுள்ள பலர் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
எதிர்வரும் காலங்களில் இதனை விரிவுபடுத்தி கல்வித்துறையில் சாதிக்கக் கூடிய சகல மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்க எண்ணியிருப்பதாக இதன் போது அவ்வமைப்பினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.