December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

MoMo Challenge என்றால் என்ன?

1 min read

Isbahan Sharfdeen

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்மையில் பதிவாகியது. ஆர்ஜன்டீனாவின் எஸ்கொபார் என்ற பகுதியில் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் இது. ON செய்யப்பட்ட Phone Camera இன் முன் வீட்டுக்கு பின் உள்ள மரத்தில் குறித்த சிறுமி தொங்கிய நிலையில் இறந்திருந்தாள்.

குறித்த சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தேடிய போது Whatsapp கு வந்த ஒரு Game Link கே காரணம் என அறியப்பட்டது. அந்த Game link தான் MoMo Challenge எனும் Game link. இதனைத் தொடர்ந்து இந்த விளையாட்டு குறித்த செய்திகள் வைரலாக ஆரம்பித்தன.

MoMo முதலில் Facebook களிலேயே இளைஞர்கள், யுவதிகளை குறிவைத்து இயங்கியது. பின்னர், Facebook இல் இருந்து Whatsapp இலக்கங்கள் பெறப்பட்டு தற்போது கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

13 வயது தொடக்கம் 18 வயதானவர்களே இதன் மூலம் குறிவைக்கப்படுகின்றனர். Online Violence Game வகையைச் சேர்ந்த இப்படியான பல Online Game கள் இணையத்தில் காணப்படுகின்றன. அவற்றைத் தேடிப் போய் விளையாடிய காலம் போய் சிறுவர், இளைஞர்களை அடையாளங் கண்டு தேடி வருகின்ற நிலைக்கு தற்போது நிலமை மாறியுள்ளது.

Blue whale என்ற விளையாட்டுக்குப் பிறகு அதிகம் வைரலாகியுள்ள இந்த விளையாட்டு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்துடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெயர் தான் மோமோ. இந்த Momo கட்டம் கட்டமாக சில செலனஜ்களை வழங்குகிறது. குறிப்பாக ஆளுக்காள் வித்தியாசமான வகையில் Chat முறையில் இந்த Game நகரும்.

தன்னை கஷ்டப்படுத்திக் கொள்ளல் தொடங்கி, தற்கொலையை தூண்டுவது வரை நகர்த்திச் செல்லும்.

குறித்த குறுஞ் செய்தியைத் தொடர்ந்தால் முதலில் குறித்த பெண்ணின் உருவம் மற்றும் மனதை சிதைவு படுத்தும் காட்சிகள் பகிரப்படும் அதன் பின்னர், அந்தரங்கம் தொடர்பான கேள்விகள் கேட்டு Task ஆரம்பிக்கும். எந்தளவுக்கு என்றால் முழுநகர்வும் Front Camera வை தானியங்க செய்து கண்காணித்து Privacy இல்லாத நிலை தோற்றுவிக்கப்படும்.

இப்படியாக குறித்த நபரது அந்தரங்க தகவல்கள் பரிமுதல் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சவால்களை தாண்டிச் செல்ல வேண்டும். முடியாது எனப் பின்வாங்கினால் அந்தரங்க தகவல்கள் உள்பட எல்லா தகவல்களையும் வைத்து Blackmail செய்யப்படும். எப்படியோ சம்பந்தப்பட்டவர் மனச்சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலையை செய்ய தூண்டிவிடும்.

எங்குமே போகாமல் வீட்டில் தான் எனது குழந்தை இருக்கிறது. அறையில் கையடக்க தொலைபேசியில் Game தான் விளையாடிக் கொண்டிருக்கிறது என நினைத்து அசிரத்தையாக இருந்து விடாதீர்கள். எப்போதும் அவதானமாக இருங்கள். என்ன தான் நடக்கிறது என்று ஒரு கை பார்த்திடுவோமே என்று அதற்குள் வீணாக சிக்கியவர்களே அதிகம்.

Blue whale வந்த போது, அதில் சிக்கி, படிப்படியாக வந்து, திமிங்கல உருவை தமது கையில் கூரிய ஆயுதத்தால் கீறிக் கொண்ட பிறகு தான் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்று அறியமுடிந்தது.

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர்களால் இளம்வயதினர் குறிவைக்கப்பட்டு 50 நாள் கொண்ட task ஆக வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த Blue whale. ஆனால், momo முதலிலேயே மனதை சிதைவு செய்துவிட்டுதான் Task ஐ ஆரம்பிக்கிறது. உயிர் போன பிறகு தான் பலருக்கும் தெரியவரும்.

எனவே, இப்படியான Link, SMS Facebook Messenger வழியாகவோ, Whatsapp வழியாகவோ அல்லது வேறு ஏதும் Social Media Networks வழியாகவோ வந்தால் அவற்றை திறக்காது Delete செய்து விடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் திறக்காதீர்கள்.

இரண்டாவது, தயவுசெய்து Whatsapp இல் Number Block செய்யும் Option காணப்படுகின்றது. அதனைப் பயன்படுத்தி குறித்த இலக்கத்தை Block செய்யுங்கள். அத்தோடு உங்கள் Contact List இல் Black List இல் அதனை சேர்த்து முடக்கி விடுங்கள். இது Whatsapp மூலம் பரவுகிறது என்பதை Whatsapp உம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, ஜப்பான், மெக்சிகோ, கொலம்பியா நாடுகளின் Code Number களுடைய இலக்கங்களில் இருந்து ‘இந்த Number ஐ Save பன்னிகங்க, Friends ஆக இருப்போம்’ என்று வந்தால் அவதானமாக இருங்கள். இது வரை மேற்சொன்ன நாடுகளின் Code Number
உள்ள இலக்கங்களில் இருந்தே Whatsapp கு SMS அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் குழந்தைகள் கைகளில் கையடக்க தொலைபேசிகளை வழங்காதீர்கள். வீட்டில் இருக்கும் இணைய வசதியுள்ள கணணிகளில் Parent Guard App களை இயக்கி வையுங்கள்.

Search Engine களில் Browser Restrictions பயன்படுத்துங்கள். Age Restrictions கான, Content. Restrictions கான Option உண்டு.

அதேபோல், கணணிகளை எல்லோருக்கும் தெரியும் இடத்தில் வையுங்கள். அறைகளில் வைக்காதீர்கள். அடிக்கடி குழந்தைகளோடு கதையுங்கள். குழந்தைகளை தொடர்ந்தும் கண்காணித்து வாருங்கள்.

குறித்த Momo Challenge மேற்கு நாடுகளில் அதிகம் பாதிப்பை, பீதியை ஏற்படுத்தி இருந்தாலும் உலக அளவில் இது குறித்த எச்சரிக்கை தேவையாக உள்ளது. காரணம், Online வழியாக வர எந்த எல்லைத் தடுப்பும் கிடையாது.

திறன்பேசி வைத்திருக்கும், Whatsapp மற்றும் Facebook போன்ற Social Media App களில் கணக்குகளை வைத்துள்ள எல்லோருக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவை வழங்குகின்றேன்.

11.08.2018
www.isbahan.com

#Awareness #CyberSpace #CyberSecurity #Netiquette #IsbahanSharfdeen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.