December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

‘செல்பேசி ஊடகவியல் – கதைகூறும் கலை’ என்ற தலைப்பில் ஒரு செயலமர்வு

1 min read

பஹன மீடியா எகடமியின் இரண்டு நாள் டிஜிட்டல் ஊடக வழிகாட்டல் அமர்வு அண்மையில் பாணந்துறை பள்ளிமுல்ல அஸ்வர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது, ‘செல்பேசி ஊடகவியல் – கதைகூறும் கலை’ என்ற தலைப்பில் ஒரு செயலமர்வை நடாத்த எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த சுமார் 35 உயர் தர மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். ஊடகவியல், காட்சி மொழி மற்றும் காட்சி ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு விடயங்களை மாணவிகள் இதன் போது கற்றுக் கொண்டனர்.

இதனை, பஹன மீடியா எகடமியுடன் இணைந்து சுமையா பெண்கள் அரபுக் கலாசாலை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

A two-day digital media session was held recently at Aswar Hajiar Hall, Panadura, Pallimulla.

During this, I got an opportunity to conduct a workshop on ‘Mojo: The Art of Storytelling’.

Around 35 advanced-level students from the Panadura region participated in it.

During this, the students learned various subjects like journalism, visual language, and editing.

It is noteworthy that Sumaiya Girls Arabic College organised this in collaboration with Pahana Media Academy.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.