உலக புத்தகம் தினம் – 2024
1 min readஇது உங்களுக்கான வாய்ப்பு!
‘நூல் உலா’ நிகழ்ச்சியில் ‘நூல் அறிமுகம்’ பகுதிக்கு நூலாசிரியர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நூல்களை தொடர்ந்தும் அறிமுகம் செய்து வருகிறேன்.
அத்தோடு, முடிந்தவரை நூலாசிரியர்களின் குரலில் அவர்களது அனுபவத்தையும் எமது நேயர்களுக்கு வழங்கி வருகிறேன்.
அந்த அடிப்படையில் இதுவரை பல நூல்கள் கிடைக்கப்பெற்று அவற்றை அறிமுகம் செய்துள்ளேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே இங்கு நீங்கள் படத்தில் காண்கிறீர்கள்.
கிடைக்கப்பெற்று இதுவரை அறிமுகம் செய்யப்படாத பல நூல்கள் உள்ளன. அவை வரும் நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.
‘நூல் உலா’ நிகழ்ச்சி பிரதி இரண்டாம் மற்றும் நான்காம் வார செவ்வாய்க் கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகி வருவது நீங்கள் அறிந்ததே.
அந்த அடிப்படையில், இது உங்களுக்கான வாய்ப்பு..!
*1. நூல் அறிமுகம்*
(நூல் எழுத்தாளர்களுக்குரிய பகுதி)
எழுத்தாளர்கள் தமது நூல்களை, சஞ்சிகைகளை எமக்குத் தபாலில் அனுப்பி வைக்கலாம். தாம் அனுப்பி வைக்கும் நூல் பற்றிய நூலசிரியரின் கருத்துக்களை (5 நிமிடங்களுக்குள்) வானொலிக்கு ஏற்ற வகையில் குரல் பதிவு செய்து அனுப்பி வைக்க முடியும்.
*2. என்னைக் கவர்ந்த நூல்*
(வாசகர்களுக்குரிய பகுதி)
வாசகர்கள் தமக்கு பிடித்த நூல் பற்றி எமக்கு எழுதி அனுப்பலாம். மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை பார்க்க முடியும்.
*3. துறைசார்ந்தோர் வழிகாட்டல்*
(துறைசார் நிபுணர்களுக்குரிய பகுதி)
வாசிப்பு, நூலுருவாக்கம், படைப்பாக்கம், நூலக முகாமை, மொழிபெயர்ப்பு என இத்துறை சார்ந்த விடயங்களில் வல்லுனர்களாக உள்ளவர்கள் தங்களது வழிகாட்டல்களை நேயர்களுக்கு வழங்க முடியும்.
*4. நிகழ்வுகள்*
(இலக்கியவாதிகள் மற்றும் வெளியீட்டாளர்களுக்குரிய பகுதி)
நூல் வெளியீடுகள், கண்காட்சிகள், வாசகர் வட்ட கலந்துரையாடல்கள், போட்டிகள் போன்றன நடைபெற இருப்பின் அவை தொடர்பான செய்திகளை எமக்கு தெரிவிக்கலாம்.
*5. தகவல்கள்*
நூல் மற்றும் வாசிப்புடன் தொடர்பான கூற்றுக்கள், தகவல்கள் இதில் இணைத்துக் கொள்ளப்படும். சமூக வலைதளங்களில் எழுதுவோரினது இவை தொடர்பான குறிப்புக்களும் இணைத்துக் கொள்ளப்படும்.
*6. சுவாரஸ்யமான அனுபவம்*
மேற்குறிப்பிட்ட விடயதானங்களுடன் தொடர்பான வரலாற்று சம்பவங்கள், சுவாரஸ்யமான அனுபவங்கள் என்பன இதில் இணைத்துக் கொள்ளப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்ட வழிகளில் இந்த ‘நூல் உலா’ நிகழ்ச்சிக்கு உங்களது பெறுமதியான பங்களிப்புகளை வழங்க முடியும். உங்களுக்கும் பங்கேற்க முடியும். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் செவ்வாய் கிழமைகளில் இரவு ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை கேட்கத் தவறாதீர்கள்!
வாசகர்கள் என்னைக் கவர்ந்த நூல் பற்றிய ஆக்கங்களை அனுப்ப, எழுத்தாளர்கள் நூல் பிரதிகளை அனுப்ப :
நூல் உலா,
தயாரிப்பாளர்,
முஸ்லிம் சேவை,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
த.பெ.இலக்கம் 574,
கொழும்பு 7.
*நூல் உலா – வாசக சாலையில் ஒரு பயணம்*
–
*இஸ்பஹான் சாப்தீன்*
தயாரிப்பாளர்
23.04.2024