வாழ்த்து நிகழ்வும் சிநேகபூர்வ சந்திப்பும்
வூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ்ஷெய்க் அமீர் அஜ்வாத் அவர்களுடனான ஒரு சிநேகபூர்வ சந்திப்பு இன்று, கொழும்பு 03 இலுள்ள ‘இந்தியன் சமர் டிரெஸ்டோரண்டில்’ இடம்பெற்றது. இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.