நிகழ்ச்சிகளை தொகுத்து நடாத்த வாய்ப்புக் கிடைத்தது
குமாரிமுல்ல இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த மாபெரும் பரிசளிப்பு விழா நிகழ்வின் நிகழ்ச்சிகளை தொகுத்து நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்வு அண்மையில் பூகொட, குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
றமழான் கால பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும், றமழான் கால போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றியீட்டியவர்களுக்கும் இதன் போது பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.