“குழந்தைகளும் வாழ்வும்” எனும் தலைப்பில் பெற்றோர்களுக்கு ஒரு நிகழ்ச்சி
1 min readOMSED நிறுவனம் புனித றமழான் மாத விடுமுறையை, மாணவர்கள் சிறந்த முறையில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் “றமழான் விடுமுறை கற்கைநெறி” (Ramalan Vocational Course) யை நாடளாவிய ரீதியில் பிரதேச சமூக நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தியது.
அந்த வகையில் இன்று, வெள்ளிக்கிழமை(16) காலை OMSED நிறுவனமும் பொல்கஹவெல PESDA நிறுவனமும் இணைந்து நடத்திய றமழான் விடுமுறைக் கற்கை நெறியின் (OMSED RVC Course) இறுதி நாள் நிகழ்ச்சி பொல்கஹவெல அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் குறித்த கற்கை நெறியில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறப்புரையாற்றுவதற்காக PESDA நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. இதன்போது “குழந்தைகளும் வாழ்வும்” எனும் தலைப்பில் அவர்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.