செல்பேசி ஊடாக வீடியோ கதைகூறும் கலை
1 min readசெல்பேசி ஊடாக வீடியோ கதைகூறும் கலை (Mobile Video Storytelling) தொடர்பான இலவச பயிற்சிநெறி அண்மையில் கஹடோவிட, இமாம் ஷாபி சென்டரில் நடைபெற்றது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கஹடோவிட, உடுகொட, திஹாரிய மற்றும் கள்எளியவைச் சேர்ந்த மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பயிற்சி நெறியின் இரண்டாம் நாள், கதைகளைக் கண்டுபிடித்தல் மற்றும் காட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக மாணவிகள் கற்றுக் கொண்டதோடு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை, இமாம் ஷாபி சென்டர் மற்றும் திஹாரிய சுமையா அரபுக் கல்லூரி, பஹன அகடமியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.