எரிகிறது மனசு.
1 min readஎரிகிறது மனசு.
Isbahan Sharfdeen
விடிகிறது தீயோடு.
விடை இல்லா வினாவோடு…
விதி எனச் சொல்வதா?
விழி! எனச் சொல்வதா?
வீதிக்கொரு கடை எரிய
விபரீதம் புரியவில்லை.
வீட்டுக்குள் எரியும் ஒருநாள்
வலி புரியும் அன்றில் தான்.
வீடு வீடாய் பிச்சை கேட்டு
வீரம் பேசிய தலைவர் எங்கே?
வீண் வாதம் புரிந்தலையும்
வாக்காடிகள் தான் எங்கே?
விடுதலைக்காய் வந்துதித்த
வீரக் கட்சிகள் தான் எங்கே?
வலிந்து புகழ்ந்து வால்பிடிக்கும்
வெட்கங் கெட்ட செயலை விட
வீதிக்கு வீதி எரிவதொரு பெரும்
வலியாய்த் தெரியவில்லை.
விடுதலை வாசம் வேண்டுமெனில்
விடு..! நாசமாகட்டும் ரி,ர கட்சிகள்!!
www.isbahan.com
2017.06.09