December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

மனிதாபிமான உதவிகள்??

1 min read

மனிதாபிமான உதவிகள்??

170529134933-sri-lanka-floods-thumb-3-full-169
Isbahan Sharfdeen

பெருமழை, வெள்ளம், மண்சரிவு, காற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் வழங்குவதும், ஆதரவு வழங்குவதும், உதவி செய்வதும் தற்போது நம்முன் இருக்கும் பாரிய பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது நம்மீதுள்ள கடமையாக உள்ளது.

இதனை பலரும் நன்கு உணர்ந்து செயற்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்கொடைகளை (ஸதகா) வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். அதே நேரம் ஸகாத்தையும் வழங்கி வைக்கலாம். அந்த வகையில் ஸகாத்தில் இப்னு ஸபீலுக்குரிய பங்கை அனாதரவாக இடம்பெயர்ந்து பாதைக்கு வந்துள்ள மக்களுக்கு வழங்க முடியுமாக இருக்கும்.

உயிர், உடமைகளை இழந்து பாதைக்கு வந்திருப்பது, குறித்த ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல. தன் மதச் சகோதரர்களைப் போன்றே சக மதச் சகோதரர்களும் தான். பாதிக்கப்பட்டுள்ள எல்லோருக்கும் ஒரே இழப்புதான். ஒரே வலிதான். ஒரே உணர்வுதான். எல்லோரும் சகோதரர்கள். எல்லோரும் மனிதர்கள். பலபோது நிவாரண உதவிகளை வழங்கச் செல்கின்ற சில சகோதரர்கள் தெரிந்தோ தெரியாமலோ இதனை மறந்துவிடுகிறார்கள். மூடிய சமூக மனோநிலையில் வாழ்ந்து பழகியதன் விளைவால் இப்படியான ஒருபோக்கு தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுவிடலாம்.

எனவே, அன்புக்குரிய சகோதர்ர்களே! அப்படியான நிலைகள் ஏற்படாமல் இருப்பதற்கே இந்த ஞாபகமூட்டல். கடந்த இரு நாட்களில் சிலர் இதனை மறந்து செயற்பட்ட சில சந்தர்ப்பங்களை அவதானிக்க முடியுமாக இருந்தது.

எம்மவர்களை கவனிக்கிறார்கள் இல்லை, எம்மவர்களுக்கு வழங்குகிறார்கள் இல்லை, தற்போது நாட்டில் சிலர் நம்மை நடத்தும் முறை எனச் சில விடயங்களை கருத்திற்கொண்டு சக இன மதத்தவர்களை கவனிக்காது கடந்துசென்றுவிடக் கூடாது. இஸ்லாம் அப்படி ஒருபோதும் வழிகாட்டியது கிடையாது.

பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதைக் குறிக்கும் “பிர்” என்ற சொல்லையே சக மதத்தவர்களுடன் பழகுதல் பற்றிக் குறிப்பிடும் போதும் அல்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்றது. எனவே கருத்துச் செறிவுள்ள இச் சொல்லை சக மதத்தவர்களுக்கு உபகாரம் செய்தல் குறித்துப் பேசும்போதும் அல்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்றது என்றால் இதனை மிகச் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். செயற்பட வேண்டும். எனவே, நிவாரணப் பணிக்காக செல்லும் போது, தான் சந்திக்கும் சக மனிதனையோ சக மதக் கிராமத்தையோ கவனிக்காது கடந்துவிடாதீர்கள். அவர்களுக்கு வழங்க வேண்டிய பங்கு இருக்கின்றது. அதனைக் கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

தற்போதைய இனவாத சூழ்நிலையில், நாட்டுக்கு நம்மைப் பற்றி சரியாக உணர வைக்கவும், சகவாழ்வுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பெருமானத்தை புரிய வைக்கவும் இறைவன் வழங்கியுள்ள ஒரு நல்ல வாய்ப்பாகும். இதனை மிகச் சரியாக புரிந்துகொண்டால் ஸகாத்தில் முஅல்லபதுல் குலூபுக்குரிய பங்கையும் இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமாக இருக்கும்.

அரச மற்றும் தொண்டு நிறுவனங்களின் மீது நம்பிக்கையிழந்த வகையில் கதைக்கும் பல சக இன மத சகோதர்ர்களை களத்தில் காண முடியுமாக உள்ளது. இப்படியானவர்களை, இப்படியான கிராமங்களை தேடிடித் தேடி கவனித்தோமாக இருந்தால் பாரிய நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கும். றமழான் மாதம் என்பதால் நிச்சயமாக பன்மடங்கு கூலி கிடைக்கும்.

2017.05.28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed